ஏப்ரல் 1 முதல் பொதுமக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

ஏப்ரல் 1 முதல் பொதுமக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

ஏப்ரல் 1 ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையை உயர்த்தவுள்ளதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பில் “ பொதுவான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் அதாவது தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கிட்டதட்ட 800 மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 10.7% அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஏற்கனவே , இந்த நிதியாண்டில் மருந்துகளின் விலை கடுமையாக உயரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி பொருளாதார வல்லுநர்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால், இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தான் மருந்துகளின் உச்சவரம்பை நிர்ணயிக்கிறது. அவ்வாறு திட்டமிட்ட மருந்துகள் பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்காக அரசினால் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.  

இவ்வாறு திட்டமிடப்பட்ட மருந்துகளின் பட்டியலில் காய்ச்சல், தொற்றுகள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் மற்றும் இரத்த சோகை பொன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக் கூடிய அனைத்து மருந்துகளும் அடங்கும். மேலும், கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சில மருந்துகளும் இந்த விலை உயர்வு பட்டியலில் இடம் பெற்று உள்ளது. 

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்