கொரோனா நான்காம் அலை: சுகாதார அமைச்சர், செயலரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா நான்காம் அலை: சுகாதார அமைச்சர், செயலரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தற்போது மிகவும் கணிசமான எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. இதனால் இதுவரை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போடப்பட்டிருந்த பல்வேறு தடைகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் சீனா, கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், கொரோனா நான்காம் அலை இந்தியாவில் பரவவுள்ளதாகவும், எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா நான்காவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினசரி இறப்பு 59 ஆக உள்ளது. எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைப் போலவே தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவ வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செளுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் போரினால் அந்நாட்டிலிருந்த தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்