டெல்டா, ஒமிக்ரான் இணைந்தே பரவி வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெல்டா, ஒமிக்ரான் இணைந்தே பரவி வருகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை காணொளி மூலமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன்,’’எம் ஐ டி., கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் ஊருக்கு சென்றுவிட்டனர்.
மீதம் 41 பேர் கல்லூரியிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள்.
3பேர் மட்டுமே 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால், தடுப்பூசி போடாமல் இருந்தனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். அதே கல்லூரியில் மேலும் 762 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20க்குப் பிறகு கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும்.
கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் தேர்வு தேதிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும். அரசு உத்தரவை மீறி கல்லூரி நடத்தப்பட்டால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, பாதிக்கப்படுவோருக்கு பெரும்பாலும் ஒமிக்ரான் பாதிப்பு தான் கண்டறியப்படுகிறது. டெல்டா, ஒமிக்ரான் இணைந்தே பரவி வருகிறது என்றார்.