குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டெங்கு!

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டெங்கு!

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டெங்கு!

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும் 42 பேரில் 32 பேர் குழந்தைகள் என மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார். 

ஏடிஎஸ் என, அழைக்கப்படும் ஒரு வகை கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதாக தெரிவித்த அவர், குழந்தைகளை கொசு கடிக்காதவாறு பெற்றோர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தூங்கும் குழந்தைகளை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க கட்டாயமாக கொசுவலை பயன்படுத்த வேண்டும் எனவும், டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட கொசுக்கள் முட்டையிடும் அதிக வாய்ப்புள்ள இடங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்