அதிகரிக்கும் கொரோனா; எய்ம்ஸ் டாக்டர்களின் குளிர்கால விடுமுறை ரத்து!

அதிகரிக்கும் கொரோனா; எய்ம்ஸ் டாக்டர்களின் குளிர்கால விடுமுறை ரத்து!

அதிகரிக்கும்

கொரோனா; எய்ம்ஸ் டாக்டர்களின் குளிர்கால விடுமுறை ரத்து!

 டில்லியில் கோவிட் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எய்ம்ஸ்

டாக்டர்களின் குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 டில்லியில் கோவிட் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1, 575 பேர்

குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களில்

ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தினசரி இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில்

டில்லி எய்ம்ஸ் இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ டில்லியில் கோவிட் பெருந்தொற்று

வேகமாக பரவி வருவதால், ஜனவரி 5 முதல் 10ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறை

ரத்து செய்யப்படுகிறது.

 டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப

வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்