15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ம் தேதி தொடங்க உள்ளது. 

இந்நிலையில், இதற்கான முன்பதிவு ஜனவரி 1ம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி ஐ.டி கார்டை பயன்படுத்தியும் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் மாணவ, மாணவிகள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்கள், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையுடன், பள்ளி ஐடி., கார்டை பயன்படுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10ம் தேதி முதல் துவங்கும் எனவும், இணை நோயுள்ளவர்கள் டாக்டர்களின் பரிந்துரையை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்