இரவு நேர ஊரடங்கை விட, முகக்கவசமே முக்கியம்!

  இரவு நேர ஊரடங்கை விட, முகக்கவசமே முக்கியம்!

இரவு

நேர ஊரடங்கை விட, முகக்கவசமே முக்கியம்!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு

போட வேண்டும் என்றும், இரவு நேர ஊரடங்கு பயனளிக்காது, முகக்கவச, தடுப்பூசியே நம்மை

காக்க போகிறது என, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், 90 சதவீத மக்கள் முழு

நேரமும் முகக்கவசம் அணிந்திருந்தால், கோவிட் பரவலை வெகுவாக குறைக்கலாம். அதில் நாம்

கவனம் செலுத்த வேண்டும்.

 உலக நாடுகள் ஒமைக்ரான்

பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது அறிவியல் முறைப்படி விதிக்க வேண்டும்.

பொருளாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் பயப்பட கூடாது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான

தனிப்பட்ட தரவுகளை உருவாக்க வேண்டும். ஒமைக்ரான் வருகிறது என்றால் அவர் எத்தனை டோஸ்

போட்டுள்ளார். கடைசி டோஸ் எப்போது போட்டார் என்று ஆராய வேண்டும். அதற்கு ஏற்றபடி பூஸ்டர்

விதிகளை கொண்டு வர வேண்டும். நாம் முதலில் வயதானவர்களை, உடல் நோய் கொண்டார்களை காக்க

வேண்டும், அவர்களுக்கு பூஸ்டர் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம்.

தியேட்டர், மால் போன்ற இடங்களில் தான் அதிகம் கொரோனா பரவுகிறது. இங்குதான் கட்டுப்பாடுகளை

கொண்டு வர வேண்டும். மற்றபடி இரவு நேர ஊரடங்கு எல்லாம் பயன் அளிக்காது.

இதற்கு பின் எந்த விதமான அறிவியலும் இல்லை. அறிவியல் முறைப்படித்தான்

ஊரடங்கு போட வேண்டும். முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் மட்டுமே

நம்மைக் காக்க போகிறது. அதுதான் முக்கியம் என்றார்.

 

Find Us Hereஇங்கே தேடவும்