ஒரே நாளில் 2 தடுப்பூசிகள் ஒரு மாத்திரைக்கு அனுமதி – கொரோனாவுக்கு எதிரான போர் தீவிரம்

ஒரே நாளில் 2 தடுப்பூசிகள்  ஒரு மாத்திரைக்கு அனுமதி – கொரோனாவுக்கு எதிரான போர் தீவிரம்

ஒரே நாளில் 2 தடுப்பூசிகள்  ஒரு மாத்திரைக்கு அனுமதி – கொரோனாவுக்கு எதிரான போர் தீவிரம்

ஒரே நாளில் 2 கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஒரு ஆண்டி வைரஸ் மாத்திரைக்கு மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 

சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல் – இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசிகும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்டது, ’கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வகையில், மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரே நாளில் 3 மருந்துகளுக்கு அனுமதி அளித்துள்ளது. 

கார்பிவேக்ஸ் தடுப்பூசி, கோவேக்ஸ் தடுப்பூசி, மற்றும் ஆண்டி வைரஸ் மாத்திரை மால்னுபிராவிர் மாத்திரைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்பிவேக்ஸ் தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆர்பிடி புரோட்டின் வகை தடுப்பூசி’ எனத் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்