கொரோனா அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் – சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா
அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் – சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் உடனடியாக
மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்
வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து,
செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
’’நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த 47 வயது
நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான்
பாதிப்பு. அந்த நபர் அறிகுறிகள் அற்றவராக இருக்கிறார்.
அவருக்கு சென்னை கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் 7 பேருக்கும் எடுக்கப்பட்ட மாதிரியிலும்
மரபியல் மாற்றம் உள்ளது. அதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு தவணை
தடுப்பூசி எடுத்துக் கொண்டால் உயிர்பலியிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.
ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அனைவரும்
முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவிலிருந்து வந்த ஒரு நபருக்கு
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பிற்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் 1.11
லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன’’ என்றார்.