பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி மருத்துவர்கள் சாதனை.!

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி மருத்துவர்கள் சாதனை.!

அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்யும் முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், முதன்முறையாக பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித எதிர்ப்பையும் ஆற்றவில்லை என தெரிவித்துள்ளனர்.

இது அடுத்த கட்ட சோதனையில் வெற்றி பெற்றால் மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த சோதனை நிச்சயம் உதவும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்கிச்சை மூளை செயல்பாடு செயலிழந்துள்ள நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்