தொன்றுதொட்டு தொடரும் களரிப்பயிற்று: பயிற்றுவிக்கும் மீனாட்சி அம்மாள் பாட்டி!..

தொன்றுதொட்டு தொடரும் களரிப்பயிற்று: பயிற்றுவிக்கும் மீனாட்சி அம்மாள் பாட்டி!..

பாரம்பரிய கலையான களரிப்பயிற்றை மீனாட்சி அம்மாள் பாட்டி விட்டுவிடாமல் தொன்றுதொட்டு இளந்தலைமுறையினருக்குள் புகுத்திவருகிறார்

அடிமுறை எனும் களரிப்பயிற்று கலை ஒரு தற்காப்பு கலையாகும். இது நாஞ்சில் நாடானா கன்னியாகுமரி கேரள பகுதி மக்களால் தற்காப்பிற்காக பயிலும் ஒரு உன்னத கலை வடிவமாகும். 78 வயதாகும் மீனாட்சி பாட்டி, தனது ஏழு வயதில் களரியை பயில தொடங்கியதாகவும், இதுநாள் வரையில் பயின்று வருவதாகவும், பயின்றதை பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருவதாகவும் கூறுகிறார்.

ஆடல்கலை மற்றும் யோக்ககலை போன்ற கூறுகளை உள்ளடக்கிய இக்களரியானது, 3000 ஆண்டுகள் பழமையானது என்பது புராணக் கதைகளின் மூலம் புலனாகிறது. 1804 ஆங்கிலேயர்களால் முடக்கப்பட்ட இக்கலை, சுதந்தரத்திற்கு பின் மீண்டும் நடைமுறைக்கு வந்தது இந்த அடிமுறை.

1949-ல் காலஞ்சென்ற மீனாட்சி அம்மாளின் கணவரால் தொடங்கப்பட்ட கடத்த நாடு களரி சங்கமானது எண்ணற்ற மாணவர்களிடம் களரியை ஊடுருவச் செய்திருக்கிறது, இந்த கலையானது பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்முறைகளை வேரோடு அழிக்கும் என கூறும் மீனாட்சி அம்மாள், அவர்களை கட்டற்ற வெளியில் சுதந்திரப்பறவையாக வாழ துணைபுரிவதோடு மட்டுமின்றி மனதளவில் தன்னந்தனியாக உலவித்திரிய நம்பிக்கையையும் வழங்குவதே இவ்வடிமுறை என்று உற்சாகமளிக்கிறார் மீனாட்சி பாட்டி

Find Us Hereஇங்கே தேடவும்