வாட்ஸ்அப் மூலம் இனி கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.!

வாட்ஸ்அப் மூலம் இனி கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.!

வாட்ஸ்அப் மூலம் இனி கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்வதற்கான எண்ணை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 3-ஆவது அலை அக்டோபரில் உச்சம்  அடையும் என்று தகவல் வெளியானது. 

இதையடுத்து தினந்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு வழக்கமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது இன்னும் சுலபமாக கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதற்கு வாட்சாப் எண் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "கொரோனா தடுப்பூசி இடங்களை இப்போது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம். http://wa.me/919013151515 மூலம் MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவதன் மூலம் தங்களுக்கு முன்பதிவு செய்யலாம்'' எனக் கூறியுள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்