கேன் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் அபாயம்! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

கேன் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் அபாயம்! -  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !

சுத்தமான குடிநீர் பல இடங்களில் கிடைக்கப்படாத காரணத்தால் பலர் கேன் வாட்டர்களை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது குடிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்பு பல மடங்கு என உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். 

அதாவது, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) என்று சொல்லக் கூடிய ஆர்ஓ நீரை மாதக்கணக்கில் குடிப்பதனால்  கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கும் என்று WHO எச்சரிக்கிறது. ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மையாக இருந்தாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழாய் நீரில் காணப்படும் அசுத்தங்களை விட ஆர்ஓ நீரைக் குடிப்பது, அதிகமான உடல் தீங்கை உண்டாக்கும் என அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு RO நீரை தொடர்ந்து உட்கொள்வதால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம் , தசைப்பிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்