பிளம்ஸ் பழத்தில் மறைந்துள்ள மகத்துவங்கள்- இதோ முழு விவரம்

பிளம்ஸ் பழத்தில் மறைந்துள்ள மகத்துவங்கள்- இதோ முழு விவரம்
பிளம்ஸ் பழத்தில்
வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இவை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள் ,பழங்கள், முட்டைகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் சரிவிகித உணவு சாப்பிடும்போது நமது உடல் நல்ல உறுதியை பெறுகிறது.
இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறந்த செயலாற்றுகிறது.சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.நமது ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு பொருட்களையெல்லாம் வடிகட்டி சிறுநீரக உடலில் இருந்து வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன.உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்.

Find Us Hereஇங்கே தேடவும்