உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? அப்ப நீங்க இந்த உணவுகளை அவாய்ட் பண்ணுங்க!

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா?  அப்ப நீங்க இந்த உணவுகளை அவாய்ட் பண்ணுங்க!

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் அதிகமாக மக்கள்  மூச்சு திணறல் ஏற்பட்டு  காரணமாக உயிர் இழந்து வருகின்றன. அதனால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் ஆஸ்துமா உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. 

கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்கள் அல்லது செயற்கை எலுமிச்சை ஜூஸை வாங்கிக் குடிப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டும்.

உறைய வைக்கப்பட்ட இறால்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதில் சல்பைட்டுகள் இருக்கும். பாட்டிலில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டுகள் இருக்கும் வாய்ப்புள்ளதால், ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து விலகி இருப்பது நல்லது. உறைய வைக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள், பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருப்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

ஒயின் அல்லது பீர் குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும். மேலும், தக்காளி, சோயா பொருட்கள், சால்மன், மாப்பிள் சிரப், லெட்யூஸ், பூண்டு, முட்டை, சோள மாவு, அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் சல்பைட்டுகள் இருப்பதால், இந்த உணவுகளையும் ஆஸ்துமா நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குர்ஆனை காலகட்டத்தில் மக்கள் பத்திரமாக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Find Us Hereஇங்கே தேடவும்