தேங்காய் பூவில் மறைந்து உள்ள அதிசயங்கள்!

தேங்காய் பூவில் மறைந்து உள்ள அதிசயங்கள்!


தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி தேங்காய் பூவை சாப்பிடுவதினால், ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்கிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க தேங்காய்ப்பூ உதவுகிறது. தேங்காய்ப்பூவில் உள்ள கலோரியின் அளவு மிக மிக குறைவு. இதனால் எடை கூடாது என்று தெரிவிக்கின்றனர் .

தேங்காய்ப்பூ உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.

சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும், சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருப்பதிலும் தேங்காய்ப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இளமையை தக்க வைத்துக் கொள்ளுகிறது.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய்ப் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும். இந்த தேங்காய்ப் பூவில் உள்ள மினரல்களும், விட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது
 

Find Us Hereஇங்கே தேடவும்