பழைய சாதத்தில் புதைந்துள்ள மருத்துவ பயன்கள்? மறக்காமல் படியுங்க!

பழைய சாதத்தில் புதைந்துள்ள மருத்துவ பயன்கள்? மறக்காமல் படியுங்க!
முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று  மருத்துவர்கள் கூறுகின்றனர்.காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம்.

 உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும்  ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் பெருகுகிறது.
 
  காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும் இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்