துளசியின் மருத்துவ பயன்கள் ? கண்டிப்பா இத படிங்க

துளசியின் மருத்துவ பயன்கள் ? கண்டிப்பா இத படிங்க
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை ஒருபோதும் யாரும் மறந்துவிடக்கூடாது. அன்றைய காலகட்டத்தில் அனைத்து நோய்களுக்கும் வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பது உண்டு.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். 

துளசி, அம்மான் பச்சரிசி சம அளவு எடுத்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு வர முகப்பரு மறையும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன் தண்ணீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம். ஆறியவுடன் சிறிது சிறிதாக அந்த தண்ணீரை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். காய்ச்சல் நன்கு குணமாகும் வரை துளசி தண்ணீரை கொடுக்கலாம்.


Find Us Hereஇங்கே தேடவும்