நமது உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் கொரோனா வைரசை எதிர்கொள்ளலாம்

நமது உணவில் இந்த  ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால்  கொரோனா வைரசை எதிர்கொள்ளலாம்

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது.நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துக்கள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 புரதம்: மாமிச வகை புரதங்கள் அல்லது தானியம் மற்றும் பயறு 4:1 என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது. பால், முட்டை, பயறு வகைகள், இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் புரதம் உள்ளன.

 வைட்டமின் ஏ: நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகளில் நிறைந்துள்ளன. கேரட், பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், மஞ்சள் பூசணிக்காய் போன்றவற்றில் சத்துகள் நிறைந்துள்ளது.

 வைட்டமின் டி: சூரிய வெளிச்சத்தில் உள்ளது. தினந்தோறும் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடத்திற்கு மேல் நின்றாலே நமது தோலில் இந்த வைட்டமின் டி சத்து உருவாகி விடும். உணவுகளில் மிகவும் அரிது. 

வைட்டமின் சி: உடலில் நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை படைத்தது.இது எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, மாங்காய் போன்ற பழங்களில் உள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்