குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம்: பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை.!

குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படலாம்: பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை.!

பொதுவாக பாராசிட்டமால் என்று அழைக்கப்படும் அசெட்டமினோபன் மருந்து அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. இது மிகவும் குறைந்த விலையுடன் கிடைப்பதால் அதிகமாக விற்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலே தாங்களாகவே பாராசிட்டமால் வாங்கி சாப்பிடுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், கர்ப்பிணிகள் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு அரபியல் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் சார்பில் 6 ஐரோப்பிய நாடுகளில் சுமார் 70,000 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடு, கவன பற்றாக்குறை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பாராசிட்டமால் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்