குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 5 முக்கிய உணவுப்பொருட்கள்!

குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத 5 முக்கிய உணவுப்பொருட்கள்!
குழந்தைகளுக்கு சில உணவுகளைத் தர கூடாது எனப் பட்டியல் இருக்கிறது. அதில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சிவிங் கம் வாங்கித் தர கூடாது. இந்த சிவிங் கம் வயிற்றில் செரிமானமாகாது, வயிறு வலி போன்ற தொல்லைகளை ஏற்படுத்தி குழந்தையின் உடலைக் கெடுத்துவிடும். 

சாக்லேட்டில் அதிகபடியான சர்க்கரையும் சுவையூட்டிகளும் சேர்க்கப்படுவதால் முடிந்தவரை சாக்லெட்களை தவிர்க்க வேண்டும். பிஸ்கட்டுகள் அனைத்தும் மைதாவால்தான் செய்யப்படுகிறது. ஆனால் ஆர்கானிக் சிறுதானிய பிஸ்கெட்களை வாங்கித் தருவது நல்லது. 

கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகளும் வரும்.

குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஐஸ்க்ரீம் சாப்பிட கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

நூடுல்ஸ் முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இதனால் மலக்காற்று துர்நாற்றமாக வரும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்