இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த பானம்!

இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த பானம்!
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதும் முக்கியமானது.

நோயெதிர்ப்பு சக்தியை தக்கவைத்துக்கொள்ள வைட்டமின் சி நிறைந்த உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த பானம்தான் இது. 

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்போது, அதில் பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, இஞ்சி 1/2 அங்குலம் சேர்க்க வேண்டும். பின்னர், மூடி போட்டு 8-10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். 

பின்னர், உங்கள் பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீரின் சுவைக்கு ஏற்ப தேனுடன் கலந்துகொண்டால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் தேன் நல்லது. 

இப்போது சூடான சுவையான தேநீர் தயார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நன்மை. 

வைட்டமின் சி அதிகமிருக்கும் பொருட்களில் நெல்லிக்காய் முக்கியமான ஒன்றாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் முருங்கை மர இலைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. நெல்லிக்காயுடன் இணையும் போது இது நம் உடலில் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. முருங்கை இலைக்கு பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்துக் கொண்டாலும் நன்மைதான்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்