ஒரு முலாம் பழத்தில் இத்தனை நன்மைகளா..!

ஒரு முலாம் பழத்தில் இத்தனை நன்மைகளா..!
கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்துவதால், வயது முதிர்ந்த காலத்தில் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

உடல் உஷ்ணம் தணிய கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருக வேண்டும். 

மேலும் முலாம் பழச்சாறு அருந்துவதால் ரத்தத்தில் நீர்ச்சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. 

முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 

அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும். இவை அனைத்தும் அவ்வப்போது முலாம் பழங்கள் சாப்பிடுவதால் நாம் பெற முடியும். 
 
முலாம் பழம் ரத்த செல்கள் உறைவதை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்