சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்.. !

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்.. !
உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை சாப்பிட்டு வரலாம். ஆனால் குடிக்கும் போது கசப்பாக இருந்தால் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது அவசியம்.

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்க சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.
பச்சையாக அல்லது சமைக்காத சுரைக்காய் ஜூஸ் உடல்நலத்திற்கு ஆபத்தானதும் கூட. சமைத்த சுரைக்காய் சாறு சிறந்தது, ஒருவேளை தீங்கற்றதும் கூட.

 சுரைக்காய் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

2 நடுத்தர அளவுள்ள சுரைக்காய் பகுதிகள் , (சமைத்த, உரித்த, நறுக்கிய வகையில் இருக்க வேண்டும்)
நெல்லிக்காய் - 4
புதினா இலைகள் - 15 முதல் 20 வரை
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 முதல் 3 தேக்கரண்டி
இஞ்சி - 2 சிறு துண்டுகள்  (நறுக்கியது )
உப்பு - தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் - தேவைக்கேற்ப

செய்முறை

சுரைக்காய், சீரகம், நெல்லிக்காய், இஞ்சி, புதினா இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் அரைத்துக் கொள்ளவும். 

அதன்பின் மற்றொரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாறு, ஐஸ் க்யூப்ஸ் அரைத்த ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், வடிகட்டி, குளிர்ச்சியுடன் குடிக்கவும்.

ஆனால் சுரைக்காய் ஜூஸ் அளவுக்கு அதிகப்படியாக உட்கொண்டால், சாத்தியமான அசுத்தங்கள் காரணமாக சில நச்சு அறிகுறிகள் ஏற்படலாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்