இளநரை ஏற்படுவதற்கு காரணங்கள்! இதோ முழு விவரம்..

இளநரை ஏற்படுவதற்கு காரணங்கள்! இதோ முழு விவரம்..

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்,பெண் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் இளநரை பிரச்சனையையை கையாண்டு வருகின்றனர்.இது ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகிறது.இவைகளை தவிர்க்க அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். 

1.தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. 

2.இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு நீண்டகாலமாகப் புகைப்பிடித்தலும் ஒரு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம்.

 வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். 

4.தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களை  பயன்படுத்தாமல் , முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.அப்போது தான் இது மாதிரியான பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்