பெண்கள் கவனத்திற்கு: மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடலாமா?

பெண்கள் கவனத்திற்கு: மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடலாமா?

கடந்த சில நாட்களாகச் சமூகவலைத்தளங்களில் கேட்கப்படும் கேள்வியான மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து நிதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. மாதவிடாயைக் காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்