காதுகளை சுத்தம் செய்ய பட்ஸ் யூஸ் பண்றீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

காதுகளை சுத்தம்  செய்ய பட்ஸ்  யூஸ் பண்றீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பட்ஸை கொண்டு தங்கள் காதுகளை சுத்தம்  செய்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கூர்மையான பொருளை வைத்துக் காதைக் குடைவதால், காதிலிருந்து அழுக்கு வெளியேறுவதற்கு பதிலாக அதிகமாக உள்ளேதான் செல்கிறது.அப்போது செவிப்பறை பாதிக்கப்படும் என்றும் தவறுதலாகச் செவிப்பறையில் அந்தப் பொருள்பட்டு கிழித்துவிட்டால், காதுவலி, காதில் புண், காது கேட்காமல் போவது, காதினுள் வீக்கம் ஏற்பட்டு வாயை அசைக்க முடியாமல் போகும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன என்று கூறுகின்றனர்.

காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதால் பட்ஸில் உள்ள காட்டன், ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்பட்டுள்ளதால் அது காதினுள் செல்வதற்கும் கூட அதிக வாய்ப்புள்ளது என்றும் மேலும் பருத்தியாலான பட்ஸின் பஞ்சுகள் காதுக்குள் அலர்ஜியையும் ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்