பனங்கிழங்கு சாப்பிட்டா இவ்வளவு நல்லதா ... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !

பனங்கிழங்கு சாப்பிட்டா இவ்வளவு நல்லதா ... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே !

பனங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லதாகும்.பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.அந்த காலத்தில் கிராமங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள் .பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சனை இருப்பவர்கள் , பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வேகவைக்காத பனங்கிழங்கை நறுக்கி காயப்போட்டு மாவாக்கி அதை சுவைக்கு ஏற்ப கூழாக தயாரித்தோ, உப்புமா செய்தோ செய்தோ அல்லது தோசையாக தயாரித்தோ சாப்பிடலாம் .அது உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்கும் .பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் மக்கள் பிட்ஸா ,பர்கர் என்று அதன் பிறகு சென்றாலும் ,பனங்கிழங்கின் அருமையை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்