மாதவிடாய் காலத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வந்த சம்பவம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

 மாதவிடாய் காலத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வந்த சம்பவம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி

 25 வயது பெண் ஒருவருக்கு மாதவிடாய் காலங்களில் அழும் பொழுது கண்களிலிருந்து ரத்தம் வந்துள்ள சம்பவம் மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு தன்னுடைய மாதவிடாய் கால கட்டங்களில் அழும் போது கண்களில் இருந்து இரத்தம் வந்துள்ளது இதனால் இவர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி யுள்ளார்.அப்போது மருத்துவர்கள் இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவர்  கண் மற்றும் கதிரியக்க பரிசோதனைகளை மேற்கொண்டார். இருப்பினும், அவரது அறிக்கைகள் அனைத்தும் சாதாரணமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்க பட்டிருந்தது.

மேலும் மாதவிடாய் காலகட்டத்தில் அந்த பெண்ணுக்கு  எந்த வலியும்,அசௌகரியமும் இல்லை என்று மருத்துவர்களிடத்தில்  கூறியுள்ளார்.ஓக்குலர் விகாரியஸ் மாதவிடாய் எனப்படும் இந்த ஒரு அரிய நிலை காரணமாக அவருடைய  கண்களில் இருந்து  இரத்தம் வந்திருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.இது மாதிரியான சம்பவம் ஒரு அரிய நிலை என்றும் மாதவிடாய் கால கட்டங்களில் கருப்பையிலே தவிர பிற உறுப்புகளில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்