பாரம்பரிய முறைப்படி சானிடைசரா? வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க..!

கொரோனாவிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பலரும் பல விதவிதமான கலர் கலரான வண்ணங்களில் சானிடைசர்களை உபயோகித்து வருகின்றனர்.
ஆனால், சலூன்களில் முகச்சவரம் செய்த பின் படிகாரம் கொண்டு தேய்த்து விடுவார்கள். சலூன் கடைகளுக்கு பலதரப்பட்ட மனிதர்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அதே ரேஷர் கொண்டு முகச்சவரம் செய்வதால் நோய்க்கிருமிகள் உருவாவதையும், பரவலையும் தடுக்கவும் தான் படிகாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், 20 கி படிகாரத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 100 கி கல் உப்பையும் சேர்த்து கலந்து, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சாதாரண தண்ணீரால் முகம்,கைகால்களை நன்கு கழுவிய பின்னர் இந்த படிகார நீரை சிறிதளவு கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிக் கொண்டாலே போதுமானது. நோய்கிருமிகள் பரவாது.
மேலும், நமது பாரம்பரிய முறைப்படி வீட்டையும், நம்மையும் பாதுகாத்துக் கொள்ள, இதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்