கை தட்டினால் இவ்வளவு நல்லதா ?நாமும் இனிமேல் இதை செய்வோமா ?

நாம் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பதை கைதட்டுவதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.ஆனால் இது நம் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது என்பதை மறுக்க முடியாது .நமது முழு உடலிலும் மொத்தம் 340 அக்குபிரஷர் புள்ளிகள் இருக்கிறது.அவற்றில் 29 நம் கைகளில் உள்ளது என்றும் -அக்குபிரஷர் சிகிச்சையின் படி, கைதட்டினால் மட்டுமே உடல் பாகங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.கைதட்டுவதன் மூலம், இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு , கொழுப்பின் அளவும் குறைகிறது.கைதட்டல் மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் "அதை எப்போதும் நாம் மறந்து விட கூடாது. நாம் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கைதட்டினால், இதய நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் விடுதலை பெறலாம்.கைதட்டுவதன் மூலம், ஆக்ஸிஜன் நம் நுரையீரலை எளிதில் அடைகிறது. இதன் காரணமாக நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் கைதட்டினால், நீங்கள் சளி, முடி உதிர்தல் மற்றும் உடல் வலி ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்