சீரான இடைவெளியில் மூச்சு விட இயலாதவர்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம்.

சீரான இடைவெளியில் மூச்சு விட இயலாதவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு சீரான இடைவெளியில் மூச்சு விட முடியாதவர்களுக்கு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், மூச்சு சரியாக விட முடியாதவர்களுக்கு தொற்று துகள்கள் நுரையீரலுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறைப் பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா தலைமை வகித்த இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சா்வதேச புகழ்பெற்ற இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டன. இது குறித்து பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், "'நுரையீரலில் தொற்றின் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது. மேலும், சுவாச நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன." என்று கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு