கர்ப்பக்காலத்தில் பெண்கள் ஏன் இடதுகைபக்கம் தான் தூங்க வேண்டும்??

கர்ப்பக்காலத்தில் பெண்கள் ஏன் இடதுகைபக்கம் தான் தூங்க வேண்டும்??
கர்ப்பக்காலம் முழுவதுமே என்ன செய்தாலும் மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்வதுண்டு. 

இன்பமான கால கட்டம் என்றாலும் அதிகப்படியான உபாதையால் அவை மன அழுத்தம் வரை கொண்டு சென்றுவிடும் என்பதால் தான் உணவு முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை ஒவ்வொன்றிலும் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அதில், பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும் , வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும்.

மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கினால், இதயம், கருப்பைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இடது பக்கத்தில் தூங்கும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், இது கால்களில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.

இடதுபக்கத்திலிருந்து அவ்வபோது ஒரு மணி நேரம் என்ற கணக்கில் வலது புறம் படுக்கலாம். 

ஆனால் பெரும்பாலும் கர்ப்பிணிகள் இடது பக்கம் தூங்குவதே நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்