சுவையான சீரக மிளகு ரசம் வைப்பது எப்படி.?

தேவையான பொருட்கள்:
பூண்டு 3 பல், மிளகு அரை தேக்கரண்டி, சீரகம்1 1⁄4 தேக்கரண்டி, வரக்கொத்துமல்லி 1⁄2 தேக்கரண்டி, வரமிளகாய் 1, மஞ்சள் தூள் 1⁄4 தேக்கரண்டி, தக்காளி- பாதி, தேவையான அளவு உப்பு, சிறிது கொத்துமல்லி தழை, கடுகு 1⁄4 தேக்கரண்டி, சிறிது கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் 1⁄4 தேக்கரண்டி, நெளிணி-1 தேக்கரண்டி,
செய்முறை:
சீரகம், கொத்துமல்லி, மிளகு இவற்றை தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்க வேண்டும். பூண்டை நசுக்கி, வரமிளகாயை கிள்ளி வைத்து கொள்ளவும். புளியுடன் தக்காளி சேர்த்து கரைத்து அல்லது பொடியாக நறுக்கி தாளிக்கும்போது போடவும். வாணலியில் நெளிணி அல்லது பொடியாக நறுக்கி அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலையை தாளித்து வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கி விடவும். பூண்டு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.இதில் பெருங்காயத்தூள் போட்டு லேசாக வதக்குங்கள். இப்போது அரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி தேவைக்கு ஏற்ப தண்ணீர் உப்பு சேர்த்து ரசம் நுரைத்து பொங்கும் போது கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும். அவ்ளோதான், வாசனை மிகுந்த ருசியான சீரக மிளகு ரசம் உண்பதற்கு தயார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு