பருக்கள் இல்லாத அழகு முகம் வேண்டுமா?

பருக்கள் இல்லாத அழகு முகம் வேண்டுமா?

வெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் முகத்தில் பருக்கள் அதிகமாக வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலும் முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும்.

அழகு நிபுணர்களோ, தினமும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் எந்த ஒரு காலத்திலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பதன் மூலம் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் என சொல்கின்றனர்.

இங்கு பருக்கள் இல்லாத சுத்தமான முகத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் பின்பற்றினால், நிச்சயம் அழகான முகத்துடன் திகழலாம்.

1. ரோஸ் வாட்டர்/ பன்னீர் - தினமும் இரவில் முகத்தை நீரில் கழுவிய பின், ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும். 

2. டூத் பேஸ்ட் - முகத்தில் சீழ் கொண்ட பருக்கள் இருந்தால், அதன் மேல் சிறிது டூத் பேஸ்ட்டை வையுங்கள். இதனால் அது உலர்ந்து மறைந்துவிடும். 

3.சந்தனம் - முக்கியமாக தினமும் முகத்திற்கு சந்தனத்தைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சந்தனம் முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, முகத்தில் உள்ள தழும்புகளையும் மறைக்கும்.மேலும், இதுபோன்ற அழகு டிப்ஸ்களை பெற குமுதம் ஹெல்த் பேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்…

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்