மிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…!

மிளகாய், மிளகு சாப்பிட்டால் ஆயுட்காலம் அதிகம்…!

இந்திய உணவுகளில் மிளகாய் மற்றும் மிளகு ஆகிய பொருட்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இவை இரண்டும் உணவின் தரத்தையும் உடலின் ஆரோக்கியத்தையும் மேப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதய மற்றும் புற்றுநோய் இறப்பு அபாயங்களைக் குறைப்பதன் மூலம் ஆய்யுட்காலம் அதிகரிக்கும். அதற்கு மிளகாய் பெரிதும் உதவுவதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் அறிவியல் அமர்வுகள் 2020 இல் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த நிலையில் அமெரிக்கா,இத்தாலி,சீனா மற்றும் ஈரான் முழுவதும் 5,70,000 பங்கேற்பாளர்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்ததில், ஆச்சரியப்படும் விதமாக,மிளகாய் உட்கொண்டவர்கள் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிளகாயின் நன்மைகளாக, இருதய இறப்பு விகிதத்தில் 26% குறைப்பு, புற்றுநோய் இறப்பில் 23% குறைப்பு, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் இருந்து, ஒவ்வாமைகளைத் தடுப்பது, வலியைக் குறைப்பது மற்றும் எடை குறைக்க உதவுவது என பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.

இத்தனை நன்மைகள் கொண்ட மிளகாய் மற்றும் மிளகை காரம் காரணமாக நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்லாமல் இருப்பது தவறு.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்