கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்…

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்…

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்…கறிவேப்பிலைக்கென்று
தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத்
தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப்
பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும்.
ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே
சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும்
போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன.
தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து இந்தச் செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த
முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக்
கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்ப்படுகிறது. அதுவும்
குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத
இடத்தினைப் பெற்று இருக்கிறது. நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை
சாதாரணமாகக் கிடைக்கின்றது. வீடுகளிலும், வீட்டுத்
தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப்
பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன. கறிவேப்பிலையில்
இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை.
நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்