கத்திரிக்காயில் உள்ள நன்மைகள்!!

கத்திரிக்காயில் உள்ள நன்மைகள்!!
கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1,பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. மேலும் இது நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய் ஆகும். 

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் தன்மை  கத்தரிக்காயில்  உள்ளது.

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக்  குறைக்கும். அதனுடன் மூளை செல்களையும் பாதுகாக்கும்.

 கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் முற்றிய கத்திரிக்காயை அதிக அளவு சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும்.

இது உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்