சப்பாத்திகள்ளியின் மகத்துவம்!!

சப்பாத்திகள்ளியின் மகத்துவம்!!
சப்பாத்திகள்ளி பழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது. இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிட முடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும். பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும்.

அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும். அந்த தொண்டை முள்ளயை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும். இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அணுக்கள் அதிகரிக்கும்.

 பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம்,ரோசத்துடனும் இருக்கும். கற்றாழைப் பழம் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது. இந்த பழம் சாப்பிட கருப்பை சுத்தம் ஆகும். நீர்க்கட்டி தானாக அழியும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்