சுக்கின் மகத்துவம்!!

சுக்கின் மகத்துவம்!!
சுக்குக்கு மிஞ்சிய மருந்து ஏதுமில்லை. வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் "சுக்கு" எப்போதும் 
முதலிடம் பெறுகிறது.

கை, கால், மூட்டு வலி உள்ளவர்கள்
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து அதனை நன்கு சூடாக்கி, பின்  இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர வலி முற்றிலும் குணமாகும்.

மேலும், சுக்கைத் தூள் செய்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பித்தம் விலகும். அதுமட்டுமின்றி சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இடித்து கஷாயம் செய்து குடித்து வர  கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

இதனை தொடர்ந்து, சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். மேலும் சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு சுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்