அசிடிட்டி பிரச்சினைக்கு எளிய தீர்வு

அசிடிட்டி பிரச்சினைக்கு எளிய தீர்வு

அசிடிட்டி பிரச்சினைக்கு எளிய தீர்வுபாட்டில்களில் அடைக்கப்பட்ட
பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை
தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி
போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும்
நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான்.இரவு உணவை நீங்கள்
தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே
முடித்துவிடுங்கள்.ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில
பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த
நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.ஊறுகாய், கார
சட்னி வகைகள், வினிகர்
போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்