உணவு உண்ண சித்தர்கள் கூறிய முறை

உணவு உண்ண சித்தர்கள் கூறிய முறை

உணவு உண்ண சித்தர்கள் கூறிய
முறை‘உண்பதிருபொழுதொழிய
மூன்று பொழுதுண்ணோம்.’ ஒரு
நாளைக்கு நாம் உண்ணும் உணவு 2 முறைதான் உட்கொள்ள வேண்டும். 2 வேளை உண்ணும்போது உணவு, செரிமானம் ஆவதற்குத் தேவையான அளவு
இடைவெளி கிடைக்கிறது. மல, நீர்கள்
கழியவும் ஏதுவாகும்.அதேபோல், முதல்
நாள் சமைத்த உணவு அமுதாகவே இருந்தாலும் மறுநாள் உண்ணக்கூடாது என்றும்
கூறியிருக்கிறார்கள். குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்பதால் உணவில் நச்சுத்தன்மை
சேர்ந்து ரத்த அழுத்தம், அதிகக்
கொழுப்பு, உடல்
பருமன் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.நன்கு பசி எடுத்தபிறகுதான் உணவுகள் கொள்ள வேண்டும். சில உணவுப்பொருட்கள்
சில உணவு வகையுடன் கலக்கும்போது உணவு விஷத்தன்மையடைய நேரிடும். அவற்றை சேர்த்தும்
உண்ணலாகாது. உதாரணத்துக்கு, பாலும்
மீனும் சேர்ந்தால் நஞ்சு. பால் அருந்தியதும் கீரை உண்பதும் தவறு. மீன் பொரித்த
எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதும் தவறு.

எப்பொழுதும் கொதித்து ஆறிய நீரைப்பருக வேண்டும்.
வெண்ணெய் நீக்கின மோரை அதிக நீர் சேர்த்துப் பருக வேண்டும். நெய்யை எப்போதும்
உருக்கி உண்ண வேண்டும் என்பதை

நீர் சுருக்கி

,

மோர் பெருக்கி

,

நெய்யுருக்கி
உண்பவர் தம் பேருரைக்கிற்போமே பிணி

என்று
சித்தர்கள் கூறியிருக்கின்றனர். நெய்யை உருக்கி உண்ணும்போது எந்த நோயும்
வருவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகளும் கூறுகின்றன. பலாப்பழத்தை நெய் அல்லது
தேனுடனும் வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து உண்பது நல்லது என்றும் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்