தோப்புக்கரணத்தின் மகத்துவம்!!

தோப்புக்கரணத்தின் மகத்துவம்!!

அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம், உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் போடுவோம். 

தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றும் கூறலாம். 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். 

தோப்புக்கரணம் சுத்தமான சமதளமான இடத்தில் செய்ய வேண்டிய பயிற்சி ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்று கொள்ளவும், வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும் போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும்.


 இப்பயிற்சியினை முதலில் ஐந்து முறையும், பின் 7, 9 என்று பழகியபின் 21 முறையும் தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு 70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. 

நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்த கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.நாமும் பயிற்சி மேற்கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்