செளசெளவின் பயன்கள்!!

செளசெளவின் பயன்கள்!!
செளசெளவில் புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச் சத்தும் நிறைந்துள்ளது. நாம் ஒரு சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் உணவில் சேர்த்து கொள்வோம். அப்படிபட்ட காய்கறிகளில் ஒன்று தான் ‘சௌசௌ’. இதனை  பெங்களூரு கத்திரிக்காய் என்றும் சொல்லப்படுவதுண்டு.

சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் இதனை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

அதுமட்டுமின்றி இது நீர்ச்சத்து அதிகமுள்ள காய் என்பதால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். அதுமட்டுமல்லாது, சிறுநீர் சம்மந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.

சௌசௌவானது நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும்.மேலும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் வீக்கங்கள் ஏற்படும். இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வீக்கங்கள் வடிந்து விடும். மேலும், கருவில் உள்ள சிசுவையும் நோய் தொற்றுக்களில் இருந்து காக்கும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்