முருங்கைக்காயின் நன்மைகள்!!

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
முருங்கைக் காயை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது உணவில் சேர்த்து கொண்டால் உடல் வலுவடையும்,ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். மேலும் இது மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். அதுமட்டுமின்றி கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
முருங்கைக்காயை பக்குவப்படுத்தி தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைக்கும். இதனால் சுலபமாக சுவாசிக்க முடியும். அதனுடன் நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
இதனை தொடர்ந்து, கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காய் அதிகம் உணவில் சேர்த்துகொள்வதன் மூலம் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்க உதவி செய்யும். அதுமட்டுமின்றி குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் உதவுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.09% -
அனுபவக் குறைவு
24.56% -
கிரிக்கெட் அரசியல்
35.69% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.66%