நன்னாரி வேரின் நன்மைகள்!!

இனிப்புடன் சிறிதளவு கசக்கும் சுவையுடைய நன்னாரி வேர், குளிர்ச்சியானது, உடல் வெப்பத்தை அகற்றி, உடலை உறுதிப்படுத்தும், வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயல்புடையது.
அதுமட்டுமின்றி நன்னாரி வேர்ச் சாற்றை, இரு துளிகள் கண்களில் விட, கண் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் விலகும்.
அதேபோல் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து நன்னாரி வேரை 20 கிராம் நசுக்கி 200 மி. லி நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிக்கட்டி 100 மி. லி வீதம் காலை, மாலை குடித்தால் - பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, சூடு, சொறி சிரங்கு, தோல் நோய்கள் ஆகியவை நீங்கும்.
நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் சீரகமும், வெல்லமும் பொடித்து கலந்து அருந்தினால் அனைத்து சிறுநீரக நோய்கள் விலகும்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு