அகத்திக்கீரையின் பலன்கள்!!

அகத்திக்கீரையின் பலன்கள்!!
பொதுவாக யாரும் அகத்திக்கீரையை விரும்பி உண்ண மாட்டார்கள், காரணம் அதன் கசப்பு சுவையாகும். ஆனால் அதன் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொண்டால் யாரும் இந்த கீரையை தவிர்க்கமாடார்கள்.

அகத்திக்கீரையை சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம் ஆகியவை உண்டாகும்.

அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை,  மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

மேலும் உடலில் உள்ள அதிகமான பித்தத்தை தணிக்கும் மற்றும் மூல சூட்டை குறைக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்க அகத்திக்கீரையை மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.

இந்தக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் ஊறவைத்து குளித்தால் இளநரை குறையும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்