நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை

நினைவாற்றலை
அதிகரிக்கும் வல்லாரை

நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி
உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது
சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல்  வளரும்.இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன்
கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து  நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின்
பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து  நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக
பயன்படுத்தலாம். என்று கூறுவர்.நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை
மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும்  கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக
சக்தி நன்கு வளரும்.தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி
கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல்
பெருகும்.வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல்
வளர்ந்து மறதி குறையும்.பசலைக் கீரை  உடலுக்கு
மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய
தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால்
நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால்  நினைவாற்றல் பெருகும்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்