மரிக்கொழுத்தின் மருத்துவ குணங்கள்!

மரிக்கொழுத்தின் மருத்துவ குணங்கள்!
பொதுவாகவே மரிக்கொழுந்தை வாசனை மலர் மாலைகளிலும், மலர்ப் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் வாசனை எண்ணெய் தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமண மூட்டியாக பயன்படுகிறது. அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல் மனிதரின் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வு அளிக்கிறது. சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கும் தன்மை கொண்டது.

மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய், சுக்குப்பொடி.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும்.

அதேபோல் மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலமும் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும், பின் அதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அது தைலப்பதத்திற்கு காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்தலாம். இதனால் தோல்நோய்கள் குணமாகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 

அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாகவும் மரிக்கொழுந்து விளங்குகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்