காய்ச்சிய தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?

காய்ச்சிய தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?

காய்ச்சிய
தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?சாதாரணமான
தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள், இயற்கையாகவே கலந்துள்ளன. 'பேக்கேஜ்டு' குடிநீரில், சுத்திகரிப்புக்கு பின், இந்த தாதுப் பொருட்கள் எல்லாம்
சேர்க்கப்படுகிறதா என்பது சந்தேகமே. மேலும், சுத்திகரிப்பு இயந்திர கருவியில் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டுவர, மூன்று மடங்குதண்ணீர் வீணாகிறது. வீட்டில்
கிடைக்கும் ஆழ்துளை கிணறு தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை, அப்படியே பருகலாம். ஆழ்துளை கிணறு தண்ணீர்
உவர்ப்பாக இருந்தால், செப்பு
பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால், அதுவே நன்றாக சுத்திகரித்து விடும். அந்த நீரை
மண்பானையில் ஊற்றி வைத்து குடித்தால், அதைவிட
சுவையான, பாதுகாப்பான குடிநீர் எதுவுமில்லை. செப்பு பாத்திரம், மண்பானை இரண்டும் உலகிலேயே மிகச்சிறந்த
சுத்திகரிப்பு கருவிகள்.அதேபோல், எப்போதும்
தண்ணீரை கொதிக்க வைத்து, குடிக்க
வேண்டிய அவசியமும் இல்லை. நோய் பரவும் காலம், மழைக்
காலங்களில் மட்டும் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி
பருகினால் போதும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரே போதும். இந்த காய்ச்சிய
குடிநீரையும், வடிகட்டி
அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்